தமிரபரணி தண்ணிர் வடகரைக்கு
COL Home » News » Chennaiபாகுபாடின்றி போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள்Add This Recommend RSS Font Problem?A Aசென்னை பிப்-20. மாநிலம் முழுவதும் பாகுபாடின்றி மேம்பாட்டுப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார். நெல்லை மாவட்டம் அச்சன்புதூர், ஆயக்குடி, பன்பொழில் மற்றும் வடகரை கீழ் பிடாகை ஆகிய நான்கு பேரூராட்சி பகுதிகளும் அவற்றுக்கு இடையே உள்ள 151 கிராமங்களும் பயன்பெறும் வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை நேற்று ஆயக்குடியில் தொடங்கி வைத்து அவர் பேசினார்.முப்பது கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள இந்த புதிய திட்டத்தால் இரண்டு லட்சம் மக்களுக்கு நாள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்றார். சுனாமி பேரலையின்போது நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 113 மீனவ கிராமங்கள் பயன்பெறும் வகையில் வள்ளியூர்-ராதாபுரம் கூட்டு குடிநீர் திட்டம் 24 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும், 85 ஆயிரம் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய இத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.மாநிலத்தில் திமுக அரசு பொறுபேற்றதிலிருந்து இதுவரை மொத்தம் 171 புதிய குடிநீர் திட்டங்கள் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மாநில அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், டி பி எம் மைதீன்கான், பூங்கோதை, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.