புதன், 6 அக்டோபர், 2010

வடமாநில ஏற்றுமதியால் தேங்காய் விலை அதிகரிப்பு


வாழப்பாடி:வாழப்பாடி பகுதியில், தேங்காய் உற்பத்தி குறைந்த நிலையில், வடமாநிலங்களிலிருந்து குவியும் ஆர்டரால்,விலை உயர்ந்தது.சேலம் மாவட்டம் வாழப்பாடிபகுதியில் இருந்து, ஆண்டு முழுவதும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு தேங்காய் ஏற்றுமதியாகிறது.தென்னை மரங்களை குத்தகைக்கு பிடித்து அறுவடை செய்தும், எண்ணிக்கை அடிப்படையிலும் விவசாயிகளிடம் இருந்து தேங்காய் மண்டி அதிபர்கள் தேங்காய்களை கொள்முதல் செய்கின்றனர்.முதல் தர தேங்காய்களை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமின்றி,ராஜஸ்தான், குஜராத்,மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம்,பீகார்,மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களுக்கும், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.இந்தாண்டு போதிய மழையில்லாததால், விளைச்சல் குறைந்தது.அதற்கிடையே விநாயகர் சதுர்த்தி விழா முடிந்தும், வடமாநிலங்களில் இருந்து தேங்காய் ஏற்றுமதிக்கு ஆர்டர் குவிகிறது.இரு மாதங்களுக்கு முன் வரை 1,000 தேங்காய்களுக்கு அதிகபட்சமாக 3,000 முதல் 3,500 ரூபாய் வரை விலை கொடுத்து கொள்முதல் செய்த வியாபாரிகள், தற்போது 5,000 ரூபாய் வரை கொடுத்து கொள்முதல் செய்கின்றனர்.இதையடுத்து, சில்லறை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் ஒரு தேங்காயை எட்டு ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர். அதனால் தேங்காய் விளையும் பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள், கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விளைச்சல் குறைவால் கவலையடைந்த தென்னை விவசாயிகளுக்கு, தேங்காய் விலை உயர்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் போதிய மழை பெய்தால், எதிர் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் விளைச்சல் அதிகரித்து, தேய்காய் விலை குறையலாம் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளி, 1 அக்டோபர், 2010

இந்தியாவில் நீதி செத்துவிட்டது




ஒருவரின் வம்சாவளியாக வந்த இடத்தை இன்னொருவர் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதில் வேறொருவர் வாடகைக்கு இருக்கிறார். அவர்தான் வீட்டுவரி உள்பட அந்த இடத்துக்கான எல்லா பங்களிப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று பிரச்னை எழுகிறது. அந்தப் பகுதியின் முக்கியஸ்தர் முன்னிலையில் பஞ்சாயத்து நடக்கிறது. மூன்று தரப்பினரிடமும் பட்டாவோ, பத்திரமோ இல்லாத நிலையில், அந்த இடத்தை மூன்றாகப் பிரித்துக் கொள்ளக் கட்டைப் பஞ்சாயத்தில் முடிவாகிறது.
கட்டைப் பஞ்சாயத்துக்கு இது சரி. ஆனால், நீதிமன்றத்திலும் இப்படியெல்லாம் ஒரு தீர்ப்பு எழுதப்பட முடியுமா? முடியும் என்பதை அயோத்திப் பிரச்னையில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.
இப்படி ஒரு தீர்ப்புக்காகவா இத்தனை முன்னேற்பாடுகளும், ஏகப்பட்ட பந்தோபஸ்துகளும் என்று கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை. அதுமட்டுமல்ல, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்பதை உணர்ந்தே தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதுபோல இருக்கிறது.
நீதித்துறை வரம்பு மீறுகிறது, நிர்வாக முடிவுகளை நீதித்துறை எடுக்க எத்தனிக்கிறது என்றெல்லாம் அரசியல்வாதிகள் குரலெழுப்பி வந்தனர். இப்போது, அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டிய விஷயத்தை, நீதிமன்றம் அவர்கள் சார்பில் செய்து முடித்திருக்கிறது, யாரும் மூச்சுவிடவில்லையே, ஏன்?
அயோத்திப் பிரச்னையில், இரண்டு முக்கியமான கேள்விகள். ஒன்று, "ராமஜென்மபூமி' என்கிற இடத்தில் ராமர் கோயில் இருந்ததா என்கிற இந்துக்களின் நம்பிக்கை சம்பந்தப்பட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு அலாகாபாத் நீதிமன்றம், தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நீதிபதி எஸ்.யு. கானும், நீதிபதி சுதிர் அகர்வாலும் வழங்கி இருக்கும் தீர்ப்பு மிகவும் தெளிவாகவே இருக்கிறது.
தொல்லியல் ஆய்வுத்துறையின் அறிக்கையின்படி, அந்தப் பகுதியில் ஒரு புராதனக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அது ராமர் கோயில்தானா என்பது தெரியாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோயிலை இடித்துத்தான் மசூதி எழுப்பப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பாழடைந்து கிடந்த கோயிலின் மீதுகூட மசூதி கட்டப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுத்துறை அறிக்கை குறிப்பிடுகிறது.
அதன் அடிப்படையிலும், "நம்பிக்கை'யின் அடிப்படையிலும் மூன்று நீதிபதிகளுமே, இடிக்கப்பட்ட பாபர் மசூதியில் மத்திய வளைவுகோபுரத்தினடியில் ராமர் விக்கிரகங்கள் இருந்த இடம், ராமர் வழிபாட்டுத்தலமாகவே தொடர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். அதாவது, மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுப்பப்பட்ட, "இது ராமர் ஜென்மபூமிதானா?' என்கிற கேள்விக்கு, தெளிவாகவே பதில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அங்கே ராமர் கோயில் எழுப்புவதைத் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டியது அரசியல் தலைவர்கள்தான். அது, சமரச முயற்சியாக இருக்க வேண்டுமே தவிர, நீதிமன்றத் தீர்ப்பாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு! ஆனால் என்ன செய்வது? அரசியல் தலைமையின் கையாலாகாத்தனம், நீதிமன்றம் நம்பிக்கைப் பிரச்னைகளில் தீர்ப்பெழுத வேண்டியிருக்கிறது.
அடுத்த கேள்வி, ராமர் ஜென்மபூமி என்று இந்துக்களாலும், பாப்ரி மஸ்ஜித் என்று இஸ்லாமியர்களாலும் சொந்தம் கொண்டாடப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது. ஒரு நீதிமன்றத்தின் பணி நம்பிக்கைக்குத் தீர்ப்புக் கூறுவதல்ல. சட்டப்படி, இடம் யாருக்குச் சொந்தம் என்று தீர்மானிப்பதுதான்.
அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் முன்னால் இருந்த கேள்வி, பாபர் மசூதி அல்லது ராம ஜென்மபூமி என்று கருதப்படும் இடம் யாருக்குச் சொந்தம் என்பதுதானேதவிர, அங்கே இருப்பது, இருக்க வேண்டியது ராமர் கோயிலா அல்லது மசூதியா என்பது அல்ல.
மகந்த் ரகுவர்தாஸ் என்பவர் 1885-லேயே ஃபைசாபாத் கீழமை நீதிமன்றத்தில் பாபர் மசூதிக் கட்டடத்தின் அருகில் ராமர் கோயில் கட்ட அனுமதி கோரி ஒரு மனு தாக்கல் செய்தார். 1949-ல் ராமர் விக்கிரகங்கள் உள்ளே வைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு சொத்து ஆளுநர் (ரிசீவர்) நியமிக்கப்பட்டு, பிரச்னைக்குரிய இடம் நீதிமன்றக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்கச் சொல்லி பூஜை செய்ய உரிமை கோரிய கோபால்சிங் விஷாரத், ராம் சபூத்ரா பகுதிக்குச் சொந்தக்காரர்களான நிர்மோகி அகாராக்காரர்கள், உத்தரப் பிரதேச சுன்னி முஸ்லிம் வக்ஃப் வாரியம் ஆகிய மூவரும் உரிமை கொண்டாடித் தொடர்ந்த வழக்குதான், இப்போது அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாகி இருக்கிறது.
நல்லவேளை, இதேபோல இன்னும் ஐந்தாறு பேர் தங்களுக்குத்தான் இந்த இடம் சொந்தம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தால் அவர்களுக்கும் ஒரு பங்கை வழங்கி சுமுகமான சமரசத்துக்கு வழிவகுக்கும் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்குமோ என்னவோ? இடத்துக்குச் சொந்தம் கொண்டாடி வழக்குத் தொடர்ந்த மூன்று தரப்பினரிடமும், முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும், தெளிவாக இடம் இன்னாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பெழுதி அதன்மூலம் அரசுக்குப் பிரச்னைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் கருதினார்கள் என்பதும் தெளிவாகிறது.
நீதிமன்றத்தில் நாம் எதிர்பார்ப்பது சமரசமல்ல. சட்டத்தின் அடிப்படையிலான தெளிவான வழிகாட்டுதல். ராமர் கோயில் அப்படியே இருக்கும். 90 சென்ட் இடம் வக்ஃப் வாரியத்துக்கு அளிக்கப்பட்டு அங்கே மசூதி கட்டிக் கொள்ளலாம். இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு. பிரச்னை மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். இதற்கு நீதிமன்றமும் தீர்ப்பும் தேவையில்லையே... ராஜீவ் காந்தியோ, வி.பி. சிங்கோ, சந்திரசேகரோ, நரசிம்ம ராவோ பிரதமராக இருந்தபோதே இந்த சமரச முடிவை ஏற்படுத்தி இருக்கலாமே...
அரசியல்தனமான இந்தத் தீர்ப்பைக் கேட்க முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இல்லாமல் போய்விட்டார். அவரது எதிர்பார்ப்புகள் நிறைவேறுகின்றன... வேறென்ன...!

ஞாயிறு, 7 ஜூன், 2009

புதன், 11 மார்ச், 2009

ஏ ஆர் ரஹ்மான்

புதன், 11 பிப்ரவரி, 2009

தமிரபரணி தண்ணிர் வடகரைக்கு

தமிரபரணி தண்ணிர் வடகரைக்கு
COL Home » News » Chennaiபாகுபாடின்றி போர்க்கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள்Add This Recommend RSS Font Problem?A Aசென்னை பிப்-20. மாநிலம் முழுவதும் பாகுபாடின்றி மேம்பாட்டுப் பணிகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருவதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் கூறியிருக்கிறார். நெல்லை மாவட்டம் அச்சன்புதூர், ஆயக்குடி, பன்பொழில் மற்றும் வடகரை கீழ் பிடாகை ஆகிய நான்கு பேரூராட்சி பகுதிகளும் அவற்றுக்கு இடையே உள்ள 151 கிராமங்களும் பயன்பெறும் வகையில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை நேற்று ஆயக்குடியில் தொடங்கி வைத்து அவர் பேசினார்.முப்பது கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள இந்த புதிய திட்டத்தால் இரண்டு லட்சம் மக்களுக்கு நாள்தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் என்றார். சுனாமி பேரலையின்போது நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 113 மீனவ கிராமங்கள் பயன்பெறும் வகையில் வள்ளியூர்-ராதாபுரம் கூட்டு குடிநீர் திட்டம் 24 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும், 85 ஆயிரம் மக்களுக்கு பயனளிக்கக்கூடிய இத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.மாநிலத்தில் திமுக அரசு பொறுபேற்றதிலிருந்து இதுவரை மொத்தம் 171 புதிய குடிநீர் திட்டங்கள் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராதிகா செல்வி, சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், மாநில அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், டி பி எம் மைதீன்கான், பூங்கோதை, மாவட்ட ஆட்சித் தலைவர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வடகரையில் திருட்டு போகும் முலிகைகள்


Tuesday, September 16, 2008

வடகரையில் திருட்டு போகும் முலிகைகள்
மேற்கு தொடர்ச்சி மலையில் கொள்ளை போகும் மூலிகை செடிகள்
சுரேஷ் செவ் ஜன 22, 2008 12:03 pm
நெல்லை: நெல்லை மாவட்டத்தில், தமிழக, கேரள எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகை செடிகள், கொடிகள், மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் புகழ் வாய்ந்த பெருகை நதி என்று போற்றப்படும் தாமிரபரணி நதி முதல் தமிழக-கேரள எல்லை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான மேக்கரை, வடகரை, கருப்பாநதி நீர்த்தேக்கம், குண்டாறு நீர்த்தேக்கம் வரை பரந்து விரிந்து கிடக்கிறது தமிழக வனப்பகுதி.இந்த வனப்பகுதிகளின் உள்ளே அரிய வகை மூலிகைகள், அரிய வகை விலங்கினங்கள் மட்டுமின்றி யானை, சிறுத்தை, மான், மிளா வகைகளும் உள்ளன.சமீப காலமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் வனத்துறையினரின் ஆசியோடு அரிய வகை மூங்கில்கள், பிரம்பு என்றழைக்கப்படும் மூலிகை கொடிகள், ஈட்டி, தேக்கு உள்ளிட்ட மரங்களும், வெட்டி கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பிரம்பு, இருக்கைகள், சோபா, கட்டில், டீபாய், ஊஞ்சல் போன்றவை செய்ய பயன்படுகிறது. செங்கோட்டை, பிரானூர் பார்டர் பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்புத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இந்த தொழிற்சாலை நடத்துபவர்கள் குறிப்பிட்ட அளவு வடநாட்டிலிருந்து பிரம்பு மூங்கிலை வாங்கி வந்து அதன் மூலம் தொழில் புரிவதாக காட்டிக் கொண்டு, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமாக விளைந்து, வளர்ந்து அடர்ந்து கிடக்கும் பிரம்பு மூங்கிலை வனத்துறையினரின் ஆசியோடு வெட்டி கடத்தி வந்து வியாபாரத்தை வளப்படுத்தி வருகின்றனர்.இந்த அரிய வகை பிரம்பு மூங்கில் மருத்துவ குணம் வாய்ந்ததாக உள்ளதால் தமிழகத்தில் உள்ள விஐபிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயரதிகாரிகள் என நெல்லை மாவட்டத்திற்கு வரும் அதிகாரிகளுக்கு இலவசமாக வழங்கி விடுவதால் இதனை யாரும் கண்டு கொள்வதில்லை என்றும், வனத்துறையில் பணிபுரிவர்கள் வீடுகளில் அதிகமாக இருக்கும் பொருட்களில் இதுவும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.மூங்கில்களை மொத்தமாக வெட்டி மதுரை, திருச்சி கொண்டு செல்லப்பட்டு ஜவுளி கடைகளில் தேவைப்படும் பைகளில் கைப்பிடியாக இந்த மூங்கில்களை பயன்படுத்தி வருகின்றனர்.அடர்ந்த காடுகளாக இருந்த வனப்பகுதிகளான அடவிநாயினார் நீர்தேக்கம், வடகரை, பழைய குற்றாலம், புளியரை, கண்ணுபுளிமேட்டு ஆகிய பகுதிகளில் அரிய வகை மரங்களை வெட்டி கடத்தி விட்டு அடையாளம் தெரியாமல் இருக்க தீவைத்து விட்டு செல்லும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.இந்த சமூகவிரோத கும்பலை இதுவரை ரிஷிமுலம் காணாமல் வனத்துறை உள்ளதாகவும் ஒரு சில ஏழைகளை மட்டும் கைது செய்து அடையாளம் காட்டி விட்டு பெரும் புள்ளிகளை காப்பாற்றி விடுவதாகவும், கூறப்படுகிறது.அரிய வகை இயற்கை வளம் அழிந்து வருவதால் வனங்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் அபாயம் எழுந்துள்ளது.

வடகரையில் இருந்து ஜந்து கிலோ மீட்டர்

வடகரையில் இருந்து ஜந்து கிலோ மீட்டர்
செங்கோட்டை அணையில் லீக்: கட்டி 3ஆண்டுகளே ஆகின்றன-செலவு ரூ.62 கோடி!திங்கள்கிழமை, ஆகஸ்ட் 13, 2007 இலவச நியூஸ் லெட்டர் பெற செங்கோட்டை:செங்கோட்டை அருகே மேக்கரையில் ரூ. 62 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அடவி நயினார் கோவில் அணைக்கட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்த அணையின் மூலம் சுமார் 7,000 ஹெக்டேர் நிலம் நீர் பாசனம் பெற்று வருகிறது.இந்த அணையின் முலம் கரிசல் மடை வழியாக வடகரை, மேல்பிடாகை, பண்பொழி, கணக்கப்பிள்ளை வலசை, குத்துக்கல் வலசை, சீவநல்லூர், இலத்தூர், சிவராமபேட்டை, நயினாகரம், இடைகால், ஆய்க்குடி, நெடுவயல், அச்சன்புதூர் ஆகிய 12 கிராமங்களும்,மேட்டுகால் பாசானம் வழியாக வடகரை, கீழ்பிடாகை, அச்சன்புதூர் ஆகிய இரண்டு கிராமங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்த அணை கட்டப்பட்டு 3 ஆண்டுகள் தான் ஆகின்றன.இந் நிலையில் அணை முழுவதும் தண்ணீர் கசிந்து வருகிறது. அணையும் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.இந்த அணையின் மேல் தளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ஏணியின் அருகே அணையின் அடிபகுதியில் ஓட்டை ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்து கொண்டுள்ளது.இது குறித்து பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் அணையின் கோட்ட செயற்பொறியாளரிடமும் முறையிடப்பட்டாலும் ஒரு பலனும் ஏற்படவில்லை.மேற்படி துளைகள் பெரிதானால் தண்ணீர் வீணாகி பாசானத்திற்கு பயன்படாமல் போகலாம்.இதனால் இப் பகுதி விவசாயிகள் பாதிக்கப்படலாம்.அணையை இவ்வளவு தரக் குறைவாகக் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளனர்.நடவடிக்கை எடுக்காவிட்டால் விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டத்தில் குதிப்போம் என வடகரை சி.பி.ஐ கட்சி கிளைச் செயலாளர் எஸ்.டி.சேக் மைதீன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் எச்சரித்துள்ளார்.இடுகையிட்டது K.K.SANDU VADAKARAI நேரம் 11:35 AM லேபிள்கள்:

புகை பிடிக்க தடை

புகை பிடிக்க தடை

தென்காசி : வடகரை கீழ்பிடாகை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை சட்டத்தின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு வடகரை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுபேர் ஹசன் தலைமை வகித்தார். வடகரை டவுன் பஞ்., தலைவர் அஜீஸ் துவக்கி வைத்தார். வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திங்கள், 22 செப்டம்பர், 2008

அழகிய இஸ்லாமிய பெயர்கள்

                                      ஸரின் இபாதி வடகரை



கேள்ஸ் பெயர்கள்

A B D F G H I J K L M N Q R S T U W Y Z
பாயிஸ் பெயர்கள்
A B D E F G H I J K L M N Q R S T U W Y Z

வெள்ளி, 4 மே, 2007

மஹிந்திரா நிறுவனம்


மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவனம், ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள் விற்பனையில் புகழ் பெற்றது. இத்துடன் ஸ்கூட்டர் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், இந்தியாவில் பைக் விற்பனையிலும் ஈடுபட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக இரண்டு பைக்குகளை அந்நிறுவனம் தயாரித்து வருகிறது. 300 சிசி திறன் கொண்ட டையாப்லோ மற்றும் 125 சிசி திறன் கொண்ட சிவாலோ என இரண்டு மாடல்களில் பைக் விற்பனைக்கு வர உள்ளது. இதில் டையாப்லோ பைக் குறித்த விவரங்கள் தற்போது தெரிய வந்துள்ளன. இந்த பைக்கின் விலை ரூ.1.40 லட்சம் என்ற அளவில் இருக்கும். மேலாண்மை கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து அதன் மூலம் இந்த பைக் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில், லிக்யூடு கூல்டு 4 ஸ்ட்ரோக் 300 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பைக்கின் முன்புறம் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக்குகள் போன்ற வசதிகள் உள்ளது. இந்த பைக்குக்கான விளம்பரம் ரோமில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் விளம்பர துõதராக பாலிவுட் நடிகர் அமீர் கான் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இ கலப்பை தமிழ் எளுத்து

file:///C:/Program%20Files/Tavultesoft/Keyman-thamizha/kmshell.exefile:///C:/Documents%20and%20Settings/WINDOWS%20XP/سطح%20المكتب/Keyman.lnk
C:\Documents and Settings\القحـــــــــــــاص\sarin\My Music\sss.htm

வெள்ளி, 27 ஏப்ரல், 2007

இலவச மென்பொருள்


Direct download link
http://www.shatterock.com/products/software/dbpwd/dbpwd.zip

உங்கள் குட்டிமென்பொருள்களின் கலெக்சனில் இதையும் வைத்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் யாராவது பாஸ்வேர்ட் மறந்து போய் கண்ணைத் தள்ளிக் கொண்டிருந்தால் கொடுத்து உதவலாம். அதுபோல எக்ஸெல் கோப்பு ஒன்றின் பாஸ்வேர்ட்டை மறந்து போனால் இங்கே வாருங்கள். இன்னொரு இலவச மென்பொருள் அதற்காக இருக்கிறது. அது உதவலாம். இப்படி அடுத்தவர்களுக்கு ஒரு உதவி செய்து அதில் அவர்கள் பெறும் மகிழ்ச்சியால் நமக்கு ஒரு மகிழ்ச்சி கிடைக்கின்றதே. அதற்கு ஈடு இணை கிடையாதுங்க.

Comments